கொவிட் 19 தொற்று பரவுவதை தடுப்பதற்கான ஊடக பங்களிப்பும் சொற்பதங்களின் அகராதியும்

கொவிட் 19 தொற்று பரவுவதை தடுப்பதற்கான ஊடக பங்களிப்பும் சொற்பதங்களின் அகராதியும்

சுகுமார் ரொக்வூட், பிரதம நிறைவேற்று அதிகாரி, இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு   கொவிட் 19 என்ற வைரஸ் தொற்றின் மர்மங்கள் பற்றிய தகவல்களை உலக சுகாதார நிறுவனம் (WHO) 2019 டிசம்பர் 31 ஆம் திகதி வெளிப்படுத்தியது. சார்ஸ் – கொவ் – 2 (SARS-CoV-2) என்ற வைரஸ் தாக்கமே கொவிட் 19 இன் பரவலுக்கான காரணம் என்பதை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதில் இருந்து இந்த வைரஸ் தொற்றும் உலகில் உள்ள எல்லா நாடுகளையும் தாக்க ஆரம்பித்தது. அதனை உலக சுகாதார

சுகுமார் ரொக்வூட்,

பிரதம நிறைவேற்று அதிகாரி,

இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு

 

கொவிட் 19 என்ற வைரஸ் தொற்றின் மர்மங்கள் பற்றிய தகவல்களை உலக சுகாதார நிறுவனம் (WHO) 2019 டிசம்பர் 31 ஆம் திகதி வெளிப்படுத்தியது. சார்ஸ் – கொவ் – 2 (SARS-CoV-2) என்ற வைரஸ் தாக்கமே கொவிட் 19 இன் பரவலுக்கான காரணம் என்பதை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதில் இருந்து இந்த வைரஸ் தொற்றும் உலகில் உள்ள எல்லா நாடுகளையும் தாக்க ஆரம்பித்தது. அதனை உலக சுகாதார நிறுவனம் கொவிட் 19 கொரொனா வைரஸ் நோய் 2019 COVID-19 (Corona Virus Disease 2019) என்று பெயர் சூட்டியது. அதன் அறிமுகமானது நாம் எதிர்பார்த்ததை விட மோசமான விளைவை கொண்டு வருவதாக இருக்கின்றது.  2020 நவம்பர் 02 ஆம் திகதி அளவில் உலகில் செய்யப்பட்டுள்ள ஆய்வுகூட பரிசோதனைகளில் இருந்து 46,166,362  பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றி இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கை தெரிவிக்கின்றது. இதுவரையில் உலகில் 216 நாடுகளிலும் 1,196,362  பேர் இந்த நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த பயணத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் பல்வேறுவிதமான தலைப்புக்களில் செய்திகளாக, கட்டுரைகளாக, புகைப்படங்களாக மற்றும் காட்சிகளாக ஊடகங்கள் கவனமாக பதிவிட்டு வருகின்றன. அச்சு மற்றும் டிஜிட்டல், இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக மக்களை இந்நோய் தொடர்பாக அறிவூட்டுவதிலும் விழிப்படையச் செய்வதிலும் ஊடகவியலாளர்கள் மிகுந்த சிரத்தையுடன் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நோய் தொற்றும் முறைகள், பரவுகின்ற வழிமுறைகள், பாதுகாப்பு வழிமுறைகள் போன்ற விடயங்களை அறிவூட்டல் செய்து வருகின்றனர். ஆனாலும் ஊடகவியலாளர்கள் முன்னுள்ள சவாலாக அமைவது இந்த நோயில் இருந்து மக்களை பாதுகாத்து வாழ வைப்பதே தவிர அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி பதுங்கி வாழச் செய்வதல்ல.

இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் ஊடகவியலாளர்களால் பின்பற்றப்படும் வகையில் அறிமுகம் செய்துள்ள பத்திரிகைத் துறையினருக்கான தொழில்சார் வழிகாட்டல் ஒழுக்கக் கோவை தற்போதைய சூழ்நிலையில் ஒன்லைன் ஊடகவியலாளர்களுக்கும் நேரடியாக தொழிழுடன் சம்பந்தப்படும் வகையில் இருக்கின்றது.

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக மரணமடைகின்ற எண்ணிக்கை தொடர்பாக ஊடகவியலாளர்களால் பதிவிடப்பட்டு மக்களை அறிவூட்டல் செய்கின்ற போது மக்கள் மரண அச்சம் காரணமாக சிகிச்சை பெற முன்வராமல் பதுங்கி இருக்கின்ற நிலைமைகளையும் அவதானிக்க முடிகின்றது. ஊடகவியலாளர்கள் நிகழ்வுடன் சம்பந்தப்பட்டவர்களாக பதிவுகளை இட்டு வருகின்ற அதே நேரம் மறுபுறமாக கொரொனா பரவுவதை தடுப்பதா அல்லது கட்டுப்படுத்துவதா என்ற அடிப்படையில் அதற்கான வழிமுறைகளை கண்டறிவது தொடர்பாக ஆய்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கை கழுவுதல், கிருமி தொற்று நீக்கி பயன்படுத்துதல், சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிதல் ஆகியவற்றை இந்த வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு பெறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக அறிவூட்டல் செய்யப்படுகின்றன. ஆலோசனைகளையும் உதவிகளையும் பெறுவதற்கு உதவியாக அமையக்கூடிய வகையில் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கங்களையும் ஊடகவியலாளர்கள் மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

பின்வரும் பிரிவுகள் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள தொழில்சார் நடைமுறைக் கோவையின் (ஒழுக்கக்கோவையின்) வழிகாட்டல்களாகும்.

விதி 01. பிழையான தகவல்கள், பொய்யான செய்திகள் மற்றும் அவற்றை ஊக்குவிப்பதை தவிர்த்தல்.

சரியானதை அறிக்கையிடல்

  • செய்திகள் மற்றும் படங்களைச் சரியாகவும் திரிபுபடுத்தல் இன்றியும் அறிவிக்க எல்லா ஊடகங்களும் சகல விதத்திலும் நியாயமான கவனம் செலுத்த வேண்டும்.
  • பிரசுரிப்பதற்கு முன் செய்தி அறிக்கைகள் சரியானவையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக சகல செய்தி ஆசிரியர்களும் அல்லது தனிப்படையான ஊடகவியலாளர்களும் நியாயமான எல்லா முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி உறுதிப்படுத்திக்கொள்ள முடியாதவிடத்து அந்த நிலை பற்றிச் செய்தி அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.
  • செய்தி ஆசிரியரும் அவரது பணியாட்டொகுதியினரும் புறப்பங்களிப்பாளர் உட்பட தாம் அறிந்தவரை பொய்யானது அல்லது பிழையற்றதல்ல என நம்பக்கூடிய காரணம் உள்ள எந்தவொரு விடயத்தையும் ஆமோதிக்கும் விதத்தில் அறிக்கைகளைப் பிரசுரிக்கலாம்.
  • பொது நலன் கருதி புலனாய்வு ஊடக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக வெளியீடுகள் ஆர்வமூட்டப்படுகி;ன்றன.

விதி 02. தகவல்கள், கருத்துக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிடும் போது திரிபுபடுத்தலை தவிர்த்து நேர்மையாக நடந்துகொள்ளல்.

பொதுவான அறிக்கையிடல் மற்றும் எழுத்தில் வடித்தல்

  • அக்கிரமம், வன்செயல்கள், ஒளடதங்களின் துஷ்பிரயோகம், கொடூரத்தன்மை பிறருக்கு நோவினை செய்தல், காமம் மற்றும் ஒழுக்கக் கேடு போன்ற குறிப்பாக அதிர்ச்சியூட்டும் அத்துடன் உணர்வுகளில் நோவினையை ஏற்படுத்தும் சுபாவத்;தையுடைய சமூகப் பிரச்சினைகளைப் பற்றிய விடயங்கள் தொடர்பாக அச்சு ஊடகம் பொது நலன் கருதிச் செய்திகளைப் பிரசுரிக்கும் அதன் கடமைக்கமைய உண்மைச் சம்பவங்கள் கருத்துக்கள் புகைப்படங்கள் மற்றும் சித்திரங்களை உரிய உணர்வுடனும் விவேகத்துடனும் சமர்ப்பிக்க விஷேட கவனம் எடுக்க வேண்டும்.

விதி 3. தனி நபர்களின் ஏகாந்தம் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு மதிப்பளித்தல்

தனிப்பட்ட வாழ்க்கை

  • அவர்களின் வீட்டு விவகாரங்கள் உடல் நலன் மற்றும் கடிதப் போக்குவரத்துக்கள் ஆகியவற்றை மதிப்பதில் ஊடகம் குறிப்பாக கவனஞ் செலுத்த வேண்டும். பொது நலன் மிகைக்கும் போது  மாத்திரமே சம்மதம் இன்றி இத்தகைய ஏகாந்தமான விடயங்களில் தலையிடுவதை நியாயமெனக் கொள்ளலாம்.
  • பொது நலனுக்காகவன்றி தனியார் அல்லது பிரசித்த இடங்களில் நியாயமாக ஏகாந்தத்தை எதிர்பார்க்க அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவை தவிர்த்து சம்மதம் இன்றி மனிதர்களைப் புகைப்படம் எடுப்பதற்காக தொலை நோக்கு (பெருப்பிக்கும்) கண்ணாடிகளை (லென்ஸ்களை) அல்லது புகைப்படக் கருவிகளைப் பாவித்தல் தவிர்க்கப்பட வேண்டும்.
  • துக்கம் அல்லது அதிர்ச்சி சம்பந்தப்பட்ட விடயங்களில் விசாரணைகள் அல்லது தலையிடுவதை உணர்வுடனும் விவேகத்துடனும் மேற்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
  • ஒரு ஏகாந்த வாழ்க்கையைப் பற்றி அல்லது மருத்துவ அறிக்கைள் மற்றும் வைத்தியசாலை தகவல்களை வெளிப்படுத்த நேரிடுவதாக இருந்தால் அதில் அலாதியானதொரு பொது நலன் இருந்தால் மாத்திரமே செய்தியைப் பிரசுரித்தல் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகும்.

விதி 4. மக்களை வற்புறுத்த அல்லது தொந்தரவு செய்ய வேண்டாம்

தொந்தரவு மற்றும் தந்திரமான வழிகளை கையாளுதல்

  • புகைப்பட ஊடகவியலாளர்கள் உட்பட ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் அல்லது தொந்தரவு செய்தல் அல்லது திரித்துக் கூறல் மூலம் அல்லது தந்திரோபாயமான வழிமுறைகளை கையாண்டு, வற்புறுத்துவதன் மூலம், நீண்ட வில்லைகளை (ஸ_ம் லென்ஸ்) பயன்படுத்தி புகைப்படங்களை எடுத்தல் சக்தியவாய்ந்த கருவிகளைக் கொண்டு தகாத முறையில் ஒட்டுக் கேட்டல், தனிநபர்களது ஏகாந்த வாழ்க்கையில் தலையிடும் வகையில் மின்னஞ்சல், தகவல்கள் ஆகியவற்றை பெறல், கைத் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டல் என்பன பொது மக்கள் ஆர்வத்தை தூண்டக் கூடிய விடயங்கள் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் அனுமதிக்க முடியாததாகும். இவை தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.

ஊடகவியலாளர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் பல்வேறு நோய்கள் தொடர்பாக கையாளபப்டுகின்ற சொற்பதங்களை குறிப்பாக “கொவிட் 19” பரவல் தொடர்பாக அறிக்கையிடும் போது பயன்படுத்தும் வகையிலான சொற்களாக இவை உள்ளன.

கொவிட் 19 தொற்று பரவல் தொடர்பாக அறிக்கையிடும் ஊடகவியலாளர்களுக்கான சொல் அகராதி

அசிம்டொமெடிக்

நோய் தொற்றினாலும் அடையாளம் அல்லது அறிகுறி தென்படுவதில்லை. ஆனாலும் பரவும் வாய்ப்பு இருக்கின்றது. தொற்று நோய் பரவுவதை தடுக்கும் பிரிவு (CDC), COVID-19 அதற்காக 14 நாட்கள் கண்காணிப்பு காலமாக கவனத்தில் எடுத்து என்ன நடக்கின்றது என்பதை அவதானிப்பு செய்கின்றது.

பப்ள் (குமிழி)

பப்ள் என்பது பௌதீக ரீதியாக தொடர்பு வைத்திருந்த மக்கள் கூட்டத்தை குறிப்பதாகும். உதாரணம்: வயது வந்த ஒரு தனிநபர் குழந்தை மற்றும் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய குடும்பத்தினர்.

நோய் கட்டுப்படுத்தல் மற்றும் தடுப்பு நிலையம் (CDC)

நாட்டில் கொவிட் 19 தொற்றை அடையாளம் காண்பது, கட்டுப்படுத்தல், தடுத்தல் மற்றும் சிகிச்சையளித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரதான தலைமை காரியாலயம்.

நோயால் மரணிக்கும் வீதம் (CFR)

மரணமடையும் வீதம். குறிப்பிட்ட நோய் காரணமாக தொற்றிற்கு உள்ளாகுதல் மற்றும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மரணிக்கும் வீதம் தொடர்பாக கண்காணிப்பு செய்தல்.

குளோரொகுயின் அல்லது ஐதரோ குளோரொகுயின் (Chloroquine or hydroxychloroquine)

மலேரியா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட மருந்து வகை. நோய் தடுப்புக்காக பயன்படுத்துவது தொடர்பான பரிசோதனை தொடர்கின்றது. ஆனாலும் இதுவரையில் தெளிவான ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை.

நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்

கொவிட் 19 போன்ற வைரஸ் தொற்றுக்கு உள்ளானவருடன் உறவை பேணியவரை அல்லது நெருங்கி பழகியவரை நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவராக  தொற்று நோய் பரவுவதை தடுக்கும் பிரிவு அடையாளம் செய்கின்றது. அத்தகையவருக்கும் நோய் தொற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கொத்தணி (குழுவாக)

ஒரே காலப்பகுதியில், ஒரே நேரத்தில், ஒரே பிரதேசத்தில் குறித்த நோய் பலருக்கு பரவுவதை கொத்தணி அல்லது கூட்டு குழுவுக்கு நோய் தொற்றல் என்று அழைக்கப்படுகின்றது.

சமூக ரீதியாக தொற்றுதல் அல்லது பரவுதல்

குறிப்பிட்ட ஒரு புவியியல் பிரதேசத்தில் நோயின் வரலாறு கண்டறியப்படாத அடிப்படையில் பரவுவதை இவ்வாறு குறிப்பிடுவதுண்டு. அத்துடன் அதுபற்றி தெரிந்தவர்களும் இல்லை.

உறுதி செய்யப்பட்ட நோய் தொற்றாளர்கள்

பரிசோதனை மூலம் குறிப்பிட்ட சில நோயாளர்கள் உரிய நோய் தொற்று பற்றி உறுதி செய்யப்பட்டதாக இருத்தல். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பலருக்கு நோய் தொற்றி இருத்தல்.

தொடர்பை கண்டறிதல்

குறிப்பிட்ட நோய் தொற்றி உறுதி செய்யப்பட்டதில் இருந்து மேலும் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கு தேவையான  முகாமைத்துவம் செய்தல்.

கோடன் செனிடெயார் (வேறுபடுத்தல், தனிமைப்படுத்தல்)

நோய் தொற்றும் அபாயம் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் மக்கள் நடமாட்டம், ஒரு பிரதேசத்தில் இருந்து இன்னொரு பகுதிக்கு செல்வது, குறிப்பிட்ட புவியில் எல்லையில் இருந்து தனிமைப்படுத்துவதால் நோய் தொடர்ந்து பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.

கொரோனா வைரஸ்

ஒருவகையான வைரஸ் குடும்பத்தால் பொதுவான சளி, ஜூரம், காய்ச்சல் போன்ற நோய்களை ஏற்படுத்திய நிலையில் பின்னர் சார்ஸ் (SARS-CoV-2) என்று அறியப்பட்டது. பின்னர் அதுவே கொவிட் 19 இற்கு காரணம் என்று அறிமுகம் செய்யப்பட்டது.

கொவிட் 19 (COVID-19)

சார்ஸ் (SARS-CoV-2) என்று அறியப்பட்ட பின்னர் அதுவே கொவிட் 19 தொற்று நோய்க்கு காரணம் என்று 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சார்ஸ் (SARS-CoV-2) மூலம் நீங்கள் பாதுகாப்பு பெற்று தொற்றில் இருந்து தவிர்ந்து கொண்டால் கொவிட் 19 இல் இருந்து பாதுகாப்பு பெற்றது என்று அர்த்தமாகும்.

பரிசோதனைக்கு உட்படுத்துதல் (Drive-through testing)

பாதுகாப்பை கவனத்தில் எடுத்து நேரடியாக வாகனத்தில் இருந்தவாறே நபரை பரிசோதனைக்கு உட்படுத்துதல். இது பெரும்பாலும் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை கருதிய நடவடிக்கையாகும். பரிசோதனை மாதிரி ஆய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டு முடிவு பெறப்படும்.

நோய் பரவுவதை தடுப்பதற்கான இடைவெளியை பேணுதல்

தும்முவது, இருமுவது மூலம் வாய்க்குள் அல்லது தொண்டைக்குள் இருக்கும் நோய்; கிருமி மற்றவர்களுக்கு தொற்றுவதை தடுப்பதற்காக இடைவெளியை பேணுதல் அல்லது 6 அடி அளவு தள்ளி நிற்றல்

தேர்ந்தெடுக்கப்பட்ட சத்திர சிகிச்சை

தொற்று நோய் பரவுவதை தடுக்கும் பிரிவானது அத்தகைய தொற்று நோய்கள் பரவுகின்ற சூழ்;நிலைகளில் எது முக்கியத்துவம் வாய்ந்தது, முக்கியத்துவம் இல்லாதது என்ற அடிப்படையில் சத்திர சிகிச்சைகளை அடையாளம் காண்பது, முக்கியத்துவம் இல்லாத சிகிச்சை வழங்கல் மற்றும் சத்திர சிகிச்சைகளை தவிர்த்து தெரிவு செய்யப்பட்டவைகளுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குதல்.

மனிதர்களை தொற்றும் நோய்

அடிக்கடி மக்களை தாக்கும் அல்லது மனிதர்களை தொற்றிக் கொள்ளும் நோய்கள். நோய் அறிகுறிகளாக காய்ச்சல், தொண்டை நோவு, வேறு ஏதாவது பொதுப்படையான வருத்தங்கள் மற்றும் சளி ஜூரம் போன்றவைகளால் இத்தகைய தொற்றுக்கள் ஏற்படுகின்றன.

பரவி தாக்கும் நோய்

குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் அல்லது பகுதியில் நோய் பரவியுள்ள நிலையில் அல்லது பரவலாம் என்று எதிர்பார்க்கக்கூடிய நோய்கள். குறிப்பிட்ட இடத்தில் கணிசமான அளவிலான மக்களை அந்த நோய் தொற்றி இருந்தால் அதுவே பரவும் நோய் ஆகும்.

தேவையான நடவடிக்கைகள்

மக்களுக்கு அல்லது தனிப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் அல்லது வீட்டுத்துறையினருக்கு தேவைப்படுகின்ற சுகாதார பாதுகாப்பு வசதிகள். அவற்றுள் குறிப்பாக அவசர உதவிகளாக எதிர்பார்க்கும் மருந்துவகை, உணவு மற்றும் தேவைப்படும் வசதிகளை வழங்க எடுக்கப்படும் நடவடிக்கைகள்.

தேவையான அரசாங்க நடவடிக்கைகள்

பொது மக்களின் சுகாதார, பாதுகாப்பு மற்றும் சமூக நலனை அடிப்படையாக கொண்டு அரசாங்கம் மற்றும் பொதுச் சேவைகளை வழங்கும் அரசாங்க முகவர்களால் வழங்கப்படும் தொடர்ச்சியான சேவைகள்.

காய்ச்சல்

தொற்று நோய்கள் பரவுவதை தடுக்கும் பிரிவின் CDC  அவதானத்தின் படி ஒருவரின் உடல் உஷ்ண நிலை 100.4°F, யை விட அதிகமாக இருந்தால் அதுவே காய்ச்சல் ஆகும்.

ஆபத்தைக் குறைத்தல்

வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதன் மூலம் நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி ஆஸ்பத்திரிகளில் உள்ள அடிப்படை சுகாதார வசதிகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுத்தல். இன்றேல் மரண வீதம் உயர்வடையலாம்.

நோய் காவி

உயிரற்ற பொருட்களும் நோயை பரப்பக்கூடிய வாகனங்களாக அமையலாம். உதாரணமாக: நோயாளி பயன்படுத்திய போர்வை, துவாய் மற்றும் சிகிச்சை உபகரணங்கள்) கொரொனா வைரஸ் தொற்றும் இவ்வாறான நோய் காவிகள் மூலமாக பரவலாம் என்று கருதப்பட்டாலும் இந்த வழிமுறையில் நோய் பரவுவது மிகவும் குறைவான சந்தர்ப்பங்களாகவே இருக்கின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி

மக்களுக்கு போதுமான அளவில் தடுப்பூசிகள் மூலம் அல்லது வேறு மருந்துகளால் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தி இருந்தால் மக்கள் மத்தியில் நோய் வேகமாக பரவுவதை தடுக்கலாம்.

வீட்டில் தனிமைப்படுத்தல்

கொவிட் 19 தொற்று இருப்பதற்கான அறிகுறி தென்படலாம் என்பதை அது தொடர்பான பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தி இருந்தால் அந்த தொற்றில் இருந்து நிவாரணம் பெறும் வரையில் வீட்டில் தங்கி இருத்தல்.

நோய் வெளிப்பட எடுக்கும் காலம்

நோய்த் தொற்று ஏற்பட்டதற்கும் அந்த நோய் அறிகுறி தென்பட்டு வெளிப்படுவதற்கும் இடையில் உள்ள காலப்பகுதி

தனிமைப்படுத்தல்

சம்பந்தப்பட்ட தொற்று நோய் பரவலாம் என்ற எதிர்பார்ப்பில் அதனை தடுக்கும் வகையில் நோய் இல்லாவிட்டாலும் தனிமைப்படுத்தல்

மத்திய கிழக்கில் இருந்து பரவும் தொற்றக்கூடிய நோய் (MERS)

இன்னுமொரு வகையான வைரஸ். MERS-CoV என்றழைக்கப்படும் ஒருவகையான நோய் இந்த வகை தொற்று நோயாக கருதப்படும்.

பரவும் வழிமுறை

ஒருவரில் இருந்து மற்றவருக்கு எவ்வாறு வைரஸ் பரவுகின்றது? வெவ்வேறுவிதமான அளவுகளிலான நுண் கிருமிகளால் ஒருவரில் இருந்து மற்றவருக்கு நோய் தொற்றக்கூடியது.

மருத்துவ பாதுகாப்பு முகக் கவசம் (சேர்ஜிகல் மார்க்ஸ் N95)

முகத்தில் மூக்கு மற்றும் வாய் வழியாக சுவாசம் அல்லது எச்சில் தெறிப்பு மூலம் வைரஸ் தொற்று பரவுவதில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக மருத்துவ திரவம் கலந்த முகக் கவசம் அல்லது முகத்திற்கான பாதுகாப்பு உபகரணம். இந்த வகை முக கவசமானது இறுக்கமானதாக அமைவதோடு சுவாசிக்கும் வளியை சுத்தீகரிப்பதற்கான வசதியும் உண்டு

எதிர்மறையான அழுத்த அறை

நோயாளி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள போது அந்த நோயாளி முழுமையாக குணமடைந்து வெளியில் அனுமதிக்கப்படும் வரையில்  நோய்க் கிருமிகள் அல்லது வைரஸ் வெளியில் பரவ முடியாதவாறு பாதுகாப்பு பலமடையச் செய்யப்பட்டுள்ள பகுதி. இந்த அறை ஒருவிதமான தனிமைப்படுத்தல் போன்ற பாதுகாப்பான அதிலும் நோயாளி தப்பிப் போகமுடியாத பாதுகாப்பு வசதிகளை உடைய சிகிச்சை அறை.

பிரதிபலித்தல் அல்லது புதிய

நொவெல் என்பதன் பொருள் “புதிய” என்பதாகும். கொரொனா வைரஸ் என்ற விடயம் மனித உடலில் இதற்கு முன்னர் கண்டறியப்பட்டிருக்கவில்லை. இதற்கு பொறுப்பான தற்போதைய தொற்று நோய் புதிய கொரெனா வைரஸ் என்று அழைக்கப்படுகின்றது.

நோய்த் தொற்று

பொதுவாக பரந்தளவிலான மக்களை தாக்கும் வகையில் பல நாடுகளில் அல்லது கண்டங்களில் பரவக்கூடிய நோய் 

ஆளுக்கு ஆள் பரவும் தொற்று நோய்

மக்களுக்கு இடையிலான நெருங்கிய தொடர்பு காரணமாக தொற்றிக் கொள்ளுதல். உரிய இடைவெளி பேணப்படாத நிலையில் மக்கள் அல்லது மிருகங்களுக்கு இடையிலான  நெருக்கம் காரணமாக இந்த தொடர்பானது பௌதீக அடிப்படையிலான செயற்பாடுகளான இருமல், தும்மல் மற்றும் மூச்சு வெளியிடல் போன்ற வழிகளில் தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகமானதாக இருத்தல்.

தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE)

சுகாதாரத்துறை ஊழியர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் போது நோய்த் தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற முகக் கவசம், கையுறை, முகத்தை மறைக்கும் மறைப்பு, மற்றும் நோய்த் தடுப்பு வழிகளோடு சம்பந்தப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தல்.

பௌதீக இடைவெளி

தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக அல்லது பரவும் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக குறிப்பிட்ட சமூகத்தில் ஆளுக்கு ஆள் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய இடைவெளியை அதிகரித்தல். உலக சுகாதார நிறுவனம் (WHO)  சமூக இடைவெளி என்பதற்கு பதிலாக  அந்த இடைவெளியை பௌதீக இடைவெளி என்று வரைவிலக்கணப்படுத்துகின்றது. இதன் நோக்கம் பௌதீக ரீதியாக நோய் பரவுவதற்கான சந்தர்ப்பங்களை தடுப்பதாகும்.

நியுமோனியா

நுரையீரலுக்குள் காற்று நிரம்பி மூச்சுத் திணறல் ஏற்படுவதால் நெஞ்சடைப்பு ஏற்படும். அத்தகைய சந்தர்ப்பங்கள் கொவிட் 19 வைரஸ் தாக்கத்திற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்கும். (வாயு இரத்தத்துடன் சேர்ந்து பரிமாறப்படும் பொது ஏற்படும் சுவாசத் தடை)

அவசர பொது சாதாரண வசதி

அரசாங்கத்தின் விஷேட நிதி மற்றும் உபரணங்கள் வாயிலாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஊடாக அவசர நிலைமைகளில் உதவுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள்

தனிமைப்படுத்தல்

வைரஸ் தொற்று பரவியுள்ளவருடன் தொடர்பை வைத்திருந்தவரை தனிமைப்படுத்தி நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் மேலும் நோய் தொற்று பரவுவதை தடுத்தல்.

மீண்டும் பரவும் வீதம்

தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்கான முகவர் நிலையம் நோய் பரவுவதை தடுக்கும் வழிமுறையை தெரிவிப்பதற்காக பயன்படுத்தும் அளவீடு. குறிப்பிட்ட நேரத்தில் கணிக்கப்பட்ட புள்ளியில் இருந்து புதிதாக தொற்றுக்கு உள்ளானவர்களது சராசரி எண்ணிக்கையாகும் R0 ஆனது கொவிட் 19 வைரஸ் தொற்றிற்கு உள்ளாகும் எண்ணிக்கையின் மதிப்பீடானது 2 இல் இருந்து 3 ஆக இருக்குமாயின் (R0 ~1.2-1.3) பருவகால தொற்று நோயாகவும் எண்ணிக்கையானது அம்மை நோய் போன்று குறைவானதாக (R0 ~12 – 18). இருந்தால் சாதாரண தொற்று நோய் என்றும் கணிக்கப்படுகின்றது.

மீள் தொற்று அல்லது தொற்றியவரில் இருந்து அதே கொத்தணிக்குள் பரவுதல் (RT-PCR)

கொவிட் 19 தொற்று பரவி இருப்பதை அறிய பயன்படுத்தும் தொழில்நுட்பம். வைரசின்  மீள் பரவல் அல்லது திரும்ப திரும்ப போக்கை கண்காணித்தல்

விரைவாக பரவி தாக்கக்கூடிய இரண்டாம் கட்ட கொவிட் தாக்கம் SARS-CoV-2

இரண்டாம் கட்டமாக பரவி வரும் கொவிட் 19 நோய் தொற்றின் அடையாள பெயர்.

சுய தனிமைப்படுத்தல்

நோய் பரவுவதை தடுக்கும் வகையில் வீட்டில் தங்கி இருத்தல் மற்றும் மக்களை தூரவாக்கும் வகையில்  அமுல்படுத்தப்படும் சட்டம்.

நோய் தொற்றி இருப்பதை முன்கூட்டியே அறியும் பரிசோதனை

நோய் தொற்றி இருக்கின்றதா? என்பதை அறிந்துகொள்வதற்காக செய்யப்படும் முன்கூட்டிய பரிசோதனை. இதன் மூலம் ஏனைவர்களுக்கும் பரவும் வாய்பை கட்டுப்படுத்த எந்த ஒரு நபரதும் திடீர் பீ.சீ.ஆர். பரிசோதனை. இதன் மூலம் வைரஸ் தொற்றின் பொசிடிவ் நிலையை அறியலாம்.

குடியிருக்கும் இடத்தில் கூரை

அத்தியாவசிய நடவடிக்கைகள், அத்தியாவசிய வியாபார வாணிப நடவடிக்கைகள் மற்றும் அவசியமான அரசாங்க நிகழ்வுகளைத் தவிர மக்கள் அவர்களது வீடுகளில் தங்கி இருக்க வேண்டும்.

வீட்டில் தங்கி இருப்பதற்கான உத்தரவு

கொரொனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் குடியிருப்பாளர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக விடுக்கப்படும் உத்தரவு. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக கைது செய்யப்படுதல், அபராதம் விதித்தல் அல்லது தடுத்து வைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.

சமூக இடைவெளி (பௌதீக இடைவெளியை கவனிக்கவும்)

குறிப்பிட்ட சமூகத்தில் ஒருவர் ஒருவரை சந்திப்பதில் உள்ள நெருக்கத்தை குறைத்தல். குறிப்பிடப்பட்ட தொற்று நோய் பரவும் வேகத்தை தணிப்பதற்காகவும் நோயில் இருந்து பாதுகாப்பு பெறவும் தேவையான ஆளுக்கு ஆள் இடைவெளி. வீட்டில் இருந்து பணிகளை செய்தல், அலுவலகத்தை மூடிவிடுதல், நிகழ்வுகளை இரத்து செய்தல் அல்லது பொதுப் போக்குவரத்தை தவிர்த்தல் போன்ற வழிகளில் இந்த சமூக இடைவெளியை ஏற்படுத்தலாம்.

பொங்கும் குமிழி (உதவும் குழுSupport Bubble

குடும்ப மற்றும் நண்பர்களிடம் இருந்து தொடர்பை துண்டித்தவர்களாக இருப்பவர்களுக்கு உதவும் நோக்கில் ஒன்று சேரும் குடியிருப்பாளர்கள்;. சில நாடுகளில் வயது வந்தவர்கள், பெற்றார் அல்லது அவர்களது 18 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளாக இருந்தாலும் தனிமையாக வாழ்ந்து வருபவர்களாக இருந்தால் இந்த  “பப்ள்” எனப்படும் குழுவால் உதவிகள் செய்யப்படுதல்

அறிகுறி

கொவிட் 19 என்ற கொரொனா தொற்றுக்கு உள்ளானதாக ஒருவரது உடம்பில் அறிகுறி தென்பட்டால் அவை பொதுவான அறிகுறிகளாக காய்ச்சல், இருமல் அல்லது தொண்டையின் அடிப்பகுதியில் நோவு என்பன வெளிப்படலாம்.

மருத்துவ சிகிச்சை

நோய் தொற்று ஏற்பட்ட பின்னர் அந்த நோய் கடுமையாவதை தடுக்கும் நோக்கில் அல்லது உடல் உளர்வதை தடுப்பதற்காக வழங்கப்படுகின்ற சிகிச்சை

தடுப்பு மருந்து (Vaccine)

நோய்த் தொற்று ஏற்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும் உடலுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காகவும் செலுத்தப்படுகின்ற தடுப்பூசி.

காற்றோட்டம்  (Ventilator)

நுரையீரலுக்குள் காற்றை செலுத்துவதற்கு இயலுமான வகையில் வாய் அல்லது மூக்கு வழியாக நுரையீரல் வரையில் செலுத்தப்படுகின்ற உபகரணம் அல்லது இயந்திரம்.

வைரஸ் தங்கி இருத்தல் (Viral shedding)

தொற்றிக் கொண்ட வைரஸ் உடலுக்குள் தேக்கமடைந்ததில் இருந்து வெளிப்படும் காலம்.

_னொடிக் (Zoonotic)

மிருகங்களுக்கு இருக்கின்ற நோய் ஆனாலும் அவற்றின் மூலமாக மனித உடலுக்கு பரவும் வாய்ப்பு இருக்கின்றது. கொவிட் 19 வைரஸ் தொற்றும் அத்தகையதாகும்.

ஆதாரம் : கொவிட் 19 என்ற கொரொனா வைரஸ் பரவல் தொடர்பான சர்வதேச சுகாதார கொள்கை வெளியீடு, CNN இன் தொற்று நோய் மற்றும் நீங்கள் அறிந்திருக்க வேண்டிய கொரொனா வைரஸ் வொக்சஸ் வெண்டிலேடர் ரெஸ்பிரேடர், தனிமைப்படுத்தல் மற்றும் வேறுபடுத்தல் தொற்று நோய் ஆய்வின் வெளியீடு, 2019 மற்றும் பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் ஒழுக்கக்கோவை

சுகுமார் ரொக்வூட்

இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு

03.11.2020

admin
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos